29 - அதிஷ்ட்டசாலிகளா நீங்கள்…?

user posted image


அதிஷ்ட்டசாலிகளா நீங்கள்…?

குறும்புத் தனமும்
குழிவிழும் கன்னமும்
குறு குறு நடையும்
கொஞ்சு மொழியும்…

கொஞ்ச நேரத்திலேயே
அவள் என்னையும்தான்
கொள்ளை கொண்டாள்!

அவளின்
அத்தனை சில்மிசங்களையும்
ரசித்தவாறே அருகே நானும்!

ம்!…
வெளியே
மழைத் தூறல்!

விரும்பி அடம் பிடித்து
வெளியே சென்று
நனையத் துடிக்கிறாள் அவள்!

தூறலில் நனைய விட
அவள் அன்னைக்கு
துளி கூட மனமில்லை!

இருப்பினும்…
சின்ன மனம் நோகாமல்
அன்னை அவள்
தன் மனதை மாற்றுகிறாள்!

கள்ளமில்லா பிள்ளை அவள்
துள்ளி ஓடிச் சென்று
கைகள் இரண்டையும் நீட்டியபடி
கல கலவெனச் சிரிக்கின்றாள்!

ஓ!…
மழைத் துளிகளே!
நீங்கள் அதிஷ்ட்டசாலிகளா…?

உங்களில் எத்தனை பேர்
புண்ணியம் செய்தீர்கள்…?

ம்!…
புண்ணியம் செய்த துளிகள் மட்டுமே
இந்தப் புனிதம் நிறைந்தவளின்
மேல் விழுவீர்கள்!

*** இவள் - சத்தியா ***