26 - நிலாத் தூறல்!
ஜூலை 3, 2007 இல் 9:49 பிற்பகல் (26 - நிலாத் தூறல்!)
Tags: 26 - நிலாத் தூறல்!

சொல்லு சொல்லு உண்மை சொல்லு!
சொல்லு சொல்லு உண்மை சொல்லு!
என்னைப் பார்த்து உண்மை சொல்லு!
அன்பே நீயும் உண்மை சொல்லு! - என்
கண்ணைப் பார்த்து உண்மை சொல்லு!
பட்டம் போலே பறக்க வைத்தாய்!
வட்டம் போட்டுச் சுற்ற வைத்தாய்!
விட்டம் தன்னில் நடக்க வைத்தாய்!
திட்டம் போட்டு விழவும் வைத்தாய்!
பட்டுப் போன்ற இதயம் சிதைந்து
சொட்டுச் சொட்டாய் இரத்தம் சிந்தி
கட்டுக் கடங்கா கண்ணீர் முட்டி
கொட்டும் மழையாய் கொட்ட வைத்தாய்!
கனவில் கூட உன்னைக் கண்டால்
கையத் தூக்கித் தொழுதே நின்றேன்
நினைவில் கூட பிரிந்திடாமல்
நிஜமாய் உன்னை சுமந்தே திரிந்தேன்
என்னை நீயும் நேசித்தாயா
இதயம் தன்னைப் பூஜித்தாயா
அன்பே என்னை சுவாசித்தாயா
கண்ணால் என்னை வாசித்தாயா
சொல்லு சொல்லு உண்மை சொல்லு! - என்
கண்ணைப் பார்த்து உண்மை சொல்லு! http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=3&t=4418&st=0#entry65585
உங்களோடு வலம் வரும்
*** இவள் - சத்தியா ***
