25 - நிலாத் தூறல்!
ஜூலை 3, 2007 இல் 4:38 பிற்பகல் (25 - நிலாத் தூறல்!)
Tags: 25 - நிலாத் தூறல்!

கருகிப் போனாயோ…?
என் வீட்டு
ஜன்னலோரத்தில்
துளிர் விட்டுத் தளைத்த
அந்த ரோஜாச் செடியில்
மனதைப் பறிப்பதாய்
அழகாய் இரு பூக்கள்!
புதிய உலகைக் காண
பூரிப்பாய்
மீண்டும் அங்கே
புதிதாய் ஒரு மொட்டு!
மொட்டான ரோஜாவின்
முகிழ் விடும் அழகை
அள்ளிப் பருக நானும்
ஆசையாய்க் காத்திருக்க…
அன்றோர் காலையிலே
அழகான அந்த மொட்டு
இதழ் விட்டு விரியாமல்
உதிர்ந்து விழுந்ததங்கே!
கருகிய மொட்டைக் கண்டு
கனத்தது என் நெஞ்சம்!
ஓ…!
என் நெஞ்சிற்குள் வளர்த்த நேசம்
நேசிக்கப் படாமலேயே
நெஞ்சோடு கருகியது போல்…
நீயும் கூட
வெளியுலகம் காணாது
கருகிப் போனாயோ…?
http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=3&t=4253&st=0#entry62751
உங்களோடு வலம் வரும்
*** இவள் - சத்தியா ***
