21 - நிலாத் தூறல்!
ஜூலை 1, 2007 இல் 5:32 பிற்பகல் (21 - நிலாத் தூறல்!)
Tags: 21 - நிலாத் தூறல்!

மறந்து விடு!
மறந்து விடு! - நீ
என்னை மறந்து விடு!
மறுபடியும் மறுபடியும் - நமக்குள்
மனக் கசப்புக்கள் வேண்டாம்!
என்னை மறந்து விடு!
மறுபடியும் மறுபடியும் - நமக்குள்
மனக் கசப்புக்கள் வேண்டாம்!
சந்தோசப் பூங்காவை
நெஞ்சோடு நான் வளர்க்க
சந்தேகத் தீ மூட்டி
சாக்கடையாய் ஆக்கி விட்டாய்!
உண்மைகள் எல்லாம்
உதாசீனம் ஆனபோது
ஊமையாய் அழுதழுது
ஊனமாகிப் போனது நெஞ்சம்!
அழுதழுது களைத்து விட்டேன் - இனி
அழுவதற்கு கண்ணீருமில்லை!
இழந்து விட்டேன் எல்லாம் - இனி
இழப்பதற்கு ஏதுமில்லை!
அன்பு என்பது
அரவணைக்கப்படும் வரை
பாசமே இல்லாத போது
நேசனைகள் இனி எதற்காக…?
மறந்து விடு!
மறந்து விடு!
என்னை நீயும் மறந்து விடு!
http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=3&t=3876&st=0#entry48035
உங்களோடு வலம் வரும்
*** இவள் - சத்தியா ***
