17 - நிலாத் தூறல்!
ஜூன் 27, 2007 இல் 12:01 பிற்பகல் (17 - நிலாத் தூறல்!)
Tags: 17 - நிலாத் தூறல்!

என்னுள் உயிர் வாழும் உன் நட்பு!
இதே போல்தான்!
ம்…!
இதே போல்தான்!
நீயும் நானும்
எப்போதும் இணைபிரியாமல்
நட்பெனும் கூண்டுக்குள்
நாளும் வலம் வந்தோம்!
பௌர்ணமி நிலவின்
வெண்கதிரின் பிரகாசிப்பாய்
அடர்த்தியான உன் நினைவுகள்
தொடர்ச்சியாக என் மனதில்!
இறைவன் எனக்குத் தந்த
இரண்டாம் நாடித் துடிப்பாய்
என்னுள்ளே நிறைந்தவள் நீ!
இமைகள் ஈரமாகும் போது
இதயத்தை வருடும் தென்றலாய்
உதயத்தை தந்தவள் நீ!
விரக்திகள் எனை வந்து
விடாமல் விரட்டும் போது
சோர்ந்து விழும் என்மனதின்
சோகம் தீர்த்தவள் நீ!
துன்பங்கள் வந்து
துவண்டிட்ட போதெல்லாம்
ஒற்றை விரல் கொண்டு
கண்ணீரை ஒற்றி எடுத்தவள் நீ!
இதயத் துடிப்புகளை
கண்டு கொள்ள முடிவதில்லை
ஆனால் உணர்ந்திடலாம்
உனைப்போல் ஓர் உள்ளத்தின்
உண்மையான நட்பின் ஆழத்தில்!
ம்…!
எம் நட்பின் ஆழத்தினை
தூறலில் நினைக்கின்றேன்!
தூறலாய் அல்லாது
தொடரும் அடை மழையாய்
இடைவிடாத நினைவலையாய்
ஆணி வேராய் வேரூன்றி
என்னுள் உயிர் வாழும் உன் நட்பு!
http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=3&t=3659&st=0#entry44495
உங்களோடு வலம் வரும்
*** இவள் - சத்தியா ***
