08 - நிலாத் தூறல்!
ஜூன் 20, 2007 இல் 9:52 பிற்பகல் (08 - நிலாத் தூறல்!)
Tags: 08 - நிலாத் தூறல்!

வறுமையின் ரேகைகள்!
நட்ட நடு நிசி வேளை
வெட்ட வெளிதனில்
கொட்டும் மழைதனில்
எட்டி நடந்து செல்கிறேன்!
அங்கே…
பட்டிணி கிடந்து பரிதவித்து துடித்து…
ஒட்டிய மேவாய் ஒடுங்கிய கன்னங்கள்
கட்டியம் கூறும் காலத்தின் ரேகையோடு
எட்டிடும் தூரத்தில் தோன்றியதோர் உருவம்!
எட்டி அடி வைத்து உற்று நோக்கினேன்
தட்டுத் தடுமாறி ஊன்றிய தடியுடன்…
ஒட்டிய உதடுகள் மெல்லத் திறந்து - கண்ணீரோடு
கொட்டிவிட்ட சோகங்கள் கோடி கோடி!
http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=3&t=2996&st=0#entry30852
உங்களோடு வலம் வரும்
*** இவள் - சத்தியா ***
