05 - நிலாத் தூறல்!

user posted image

 

நினைவுகள்!

கனவுகளை இமைக்குள்
கட்டி வைத்த
இருட்டிய விழிகளின்
ஊமைக் கதை இது!

கண்ணீரில் ஆடும்
உன் பிம்பத்தில்
தொலைகிறது என் நிம்மதி!

காலம் காலமாய்
அடைகாக்க எண்ணிய
எம் உறவு
தேய் நிலாவாய் போனாலும்…

பூதம் காத்த புதையலாய்
உன் நினைவுகளை
என்றும்
என் நெஞ்சுக்குள்ளேயே
பத்திரப்படுத்தி வைக்கின்றேன்!

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=2983


உங்களோடு வலம் வரும்

*** இவள் - சத்தியா ***
user posted image