06 – நிலாத் தூறல்!


தேடிப் பார்க்கின்றேன்!

இந்த மரக்கிளையில்
வந்து இளைப்பாறிச் செல்லும்
ஆயிரம் பறவைகள் போல்…

உன் மனதிலும்
ஆயிரம் பறவைகள்
இளைப்பாறிச் செல்வதை
அறியாதவளாய்…

ஓர் பாவப்பட்ட ஜென்மமாய்
நீ விரித்த
வலையில் விழுந்தேன்!

ஓ…!
பாழாய்ப் போன மனதிலிருந்து
பாவி உன் நினைவுகளை
அழிக்கவும் முடியாமல்…..
மறக்கவும் முடியாமல்…..

உன்னோடு சேர்ந்து
விரலோடு விரல் கோர்த்து
கால் பதித்த
தடையங்களை எல்லாம்
இப்போதும்
தேடிப் பார்க்கின்றேன்!

http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=3&t=2984&st=0#entry30735

 இவள் – சத்தியா ***