கடந்து சென்ற காலங்களின்
அனுபவப் பயணங்கள் யாவும்
வெறும் காயங்களாகி
உள்ளே அணைந்து அணைந்து
எரியும் ஞாபகங்களாய்…
பணம் பூத்துக் குலுங்கும்
மரமாய் பூத்துக் குலுங்கி
கல்லெறி பட்டுப் பட்டு
காயங்கள் மட்டுமே மிஞ்ச…
முகம் தொலைத்த
மனித முகங்களோடு
தினம் புண்ணாகித் தவித்து
மனசு இறுகி
உதடுகளில் ஓசை தொலைத்து
ஏதோ ஓர் வலித்த புள்ளியில்
திசை தெரியாமல் நின்றபோது…
அன்பாய், பாசமாய்
நட்பாய், காதலாய்
இவை எல்லாம் கலந்து…
உள்ளம் திறந்து
உள்ளன்போடு நீ உதிர்த்த
”கலங்காதே நான் இருக்கிறேன்”
என்ற அந்த ஒற்றை வார்த்தை
மரணித்துப் போன
என் உணர்வுகளுக்கெல்லாம் ஒத்தடமானது…!
நிசப்தம் – சத்தியா
படம் – Malaikottai
பாடல் – தேவதையே வா வா …
பாடல் – தேவதையே வா வா …
*** இவள் – சத்தியா ***

அஹ்ஸன் சொன்னது,
ஜனவரி 31, 2012 இல் 6:01 மு.பகல்
இந்த வலியை என்னாலும் உணர முடியுது சத்தியா …
அழகான உணர்வுபூர்வமான கவிதை ..
சத்தியா சொன்னது,
பெப்ரவரி 1, 2012 இல் 11:02 பிற்பகல்
ம்ம்… நன்றி அஹ்ஸன்.