171 – புது வெள்ளை மழை…

ஏழை
பணக்காறன்
என்ற பேதம் தவிர்த்து
யாவரும் ஒரே தரம் என்று…

பள்ளிப் பருவத்திலே
பிள்ளைகளின் மத்தியிலே
பாடசாலைச் சீருடையாய்
வெள்ளை ஆடை இருந்தது அங்கே…!

குடிமனை மீதினிலே
கொட்டிய வெண்பனியால்…

ஏழையின் இல்லமும்
எஜமானின் மாளிகையும்
சரிசமம் என்றது இங்கே…!

ம்ம்… இருப்பினும்…
கொட்டும் பனி மழையில்
உடல் விறைக்கும் போதெல்லாம்
மனதுள் விரட்டி அடித்து
விரல் கோர்க்கத் துடிகிறது
உன்னோடு என் நினைவுகள்…!

நிசப்தம் – சத்தியா

படம் – ரோஜா :
பாடல் – புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது …


*** இவள் – சத்தியா ***

4 மறுமொழிகள்

  1. Abufaisal சொன்னது,

    ஜனவரி 23, 2012 இல் 2:54 பிற்பகல்

    ஏற்கனவே மைனஸ் 1 டிகிரி குளிரு தாள முடியல நீங்க வேற பனிமழைன்னு சொல்லி குளிரை அதிகமாக்கி நடுங்க வக்கிறீங்க….சத்யா…

  2. மழை சொன்னது,

    ஜனவரி 25, 2012 இல் 5:32 பிற்பகல்

    கொட்டும் பனி மழையில்
    உடல் விறைக்கும் போதெல்லாம்
    மனதுள் விரட்டி அடித்து
    விரல் கோர்க்கத் துடிகிறது
    உன்னோடு என் நினைவுகள்////

    ஹ்ம் காதல் மைனஸ் 30டிகிரி:)

    • சத்தியா சொன்னது,

      ஜனவரி 25, 2012 இல் 10:32 பிற்பகல்

      அட போங்க நீங்க. -1 ஐயே நம்மால தாங்க முடியல்ல. இதுக்குள் -30 ஆ…? ம்ம்… உங்களுக்கென்ன சிங்கப்பூர் உஷ்ணத்தில் இருந்து கொண்டு சுகமா சொல்லுவீங்க. ஹா ஹா ஹா.


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 29 other followers