பறந்து வரச் சிறகிருந்தும்
நீ பறந்து வராமல்
உன் இறக்கைகளை
ஒடுக்கிக் கொண்டு
என்னை மட்டும்
பற பற என்கிறாய்…!
என் முறிந்த சிறகுகளோடு
நான் எப்படிப் பறப்பேன் சொல்…?
இருப்பினும்…
என்றாவது ஓர் நாள்
நானும் கூட
என் இறக்கைகளை விரித்து
உன்னிடம் பறந்து வரலாம்…!
அதுவரை
உன் அன்பு மழையில்
நனைந்துகொண்டிருக்கும் வாய்ப்பை
எனக்குத் தவறாமல் கொடு
அது போதும் எனக்கு…!
நிசப்தம் – சத்தியா
படம் – Dharma Pathini:
பாடல் – நான் தேடும் செவ்வந்திப் பூவிது …
*** இவள் – சத்தியா ***

அஹ்ஸன் சொன்னது,
ஜனவரி 21, 2012 இல் 12:44 பிற்பகல்
ம்ம் ரொம்ப அர்த்தமுள்ள கவிதை இது,,அழகாய் இருக்கு சத்தியா ….
சத்தியா சொன்னது,
ஜனவரி 21, 2012 இல் 4:10 பிற்பகல்
ம்ம்… நன்றி அஹ்ஸன்.
Abufaisal சொன்னது,
ஜனவரி 21, 2012 இல் 2:09 பிற்பகல்
ஹா…ஹா…ஹா…! நல்லாயிருக்கு… சத்யா
சத்தியா சொன்னது,
ஜனவரி 21, 2012 இல் 4:12 பிற்பகல்
அடடா… இன்று நல்லா சிரிச்சிட்டீங்க போல இருக்கே …? ம்ம் நன்றி Abufaisal.
மழை சொன்னது,
ஜனவரி 22, 2012 இல் 3:57 மு.பகல்
உங்களுக்கு ஏன் சிறகு முறிந்தது??? ஹஹ ஹ்ம் கவிதை சூப்பர்:)
சத்தியா சொன்னது,
ஜனவரி 22, 2012 இல் 10:26 மு.பகல்
ஓ… அதுவா கண்ணன்…? உயரப் பறந்து போகும்போது எதிரே வந்த பறவையோடு மோதி ஒரு அக்சிடன் ஆச்சு. அவ்வளவுதான். ஹா ஹா ஹா… நன்றி கண்ணன்.