வரண்டு போன பூமி
வானத்தைப் பார்த்து
ஏங்குவது போல்…
தத்தெடுப்பார் யாருமின்றி
தனித்துப் போய்
உன்னையே எதிர் பார்த்து
வதங்கிச் சாகிறது இதயம்…!
உன் நினைவுகளை எல்லாம்
மூட்டை கட்டி
வலிந்து முயன்று
வெளியே தள்ள முயன்றும்
தோற்றுப் போய் விட்டேன்…!
உயிரே…!
ஓர் உண்மை சொல்லேன்
இப்போதும்
நீ என்னை நேசிக்கிறாயா…?
உன் மௌனப் பாஷைகளால்
மரண வேதனை தரும் வலியை
தொடர்ந்தும் எனக்குத் தராதே…!
என் அழுத விழியின் ஓரத்தில்
குளிர்ந்து விழும் பனித்துளியாய்…
உன் மௌனங்களை உடைத்தெறிந்து
மறுமொழி ஒன்று சொல்லி விடு…!
நிசப்தம் – சத்தியா
படம் –
பாடல் – காதல் வந்தும் சொல்லாமல்…
*** இவள் – சத்தியா ***

அஹ்ஸன் சொன்னது,
ஜனவரி 19, 2012 இல் 6:00 மு.பகல்
கவிதை ரொம்ப அழகா அருமையா இருக்கு சத்தியா .. இது தான் என்று சொல்ல முடியாத உணர்வை எவ்வளோ அழகாக வெளிப்படுத்தி இருக்கீங்க…. குறிப்பிட்டு சொல்ல எந்த வார்த்தையும் வேறாக இல்லை எல்லா கவி வரிகளுமே சூப்பர் …
சத்தியா சொன்னது,
ஜனவரி 19, 2012 இல் 5:38 பிற்பகல்
ம்ம்… நன்றி அஹ்ஸன்.