நிலா நனைந்த இரவில்
நிழலாய்ப் போன
உன் தரிசனங்களாலே
ஊமையாகிப் போன
நேசக் குயிலொன்று
நினைவுகளை மீட்டிக்கொண்டு
முகாரி இசைக்கின்றது…!
உலர்ந்த உதடுகளுடன்
உருக்குலைந்த உள்ளத்துடன்
உறக்கம் தொலைத்த விழிகளுடன்
வானத்தை வெறித்தபடி…
சின்னக் கண்ணுக்குள்
சிறுகச் சிறுகக் கட்டிய
சின்னஞ் சிறு ஆசையெல்லாம்
சிந்தி விழும் கண்ணீரோடு
சிதறுண்டு கரைய…
ஏதோ தொலைந்து போனதாய்…
இல்லை இல்லை
எதையோ தொலைத்து விட்டதுவாய்…
சோகம் முட்டி மோதி
தொண்டை வரை சிக்கிக் கொள்ள
உனை திக்கெங்கும் தேடுகிறேன்…!
நிசப்தம் – சத்தியா
படம் – உயிரே.
பாடல் – பூங்காற்றிலே உன் சுவாசத்தை …
*** இவள் – சத்தியா ***

அஹ்ஸன் சொன்னது,
ஜனவரி 18, 2012 இல் 5:19 மு.பகல்
//உலர்ந்த உதடுகளுடன்
உருக்குலைந்த உள்ளத்துடன்
உறக்கம் தொலைத்த விழிகளுடன்
வானத்தை வெறித்தபடி…
சின்னக் கண்ணுக்குள்
சிறுகச் சிறுகக் கட்டிய
சின்னஞ் சிறு ஆசையெல்லாம்
சிந்தி விழும் கண்ணீரோடு
சிதறுண்டு கரைய…//
வாசிக்கும் கவிதை துளிகள் மனதை வலிக்க செய்கிறது..
சோகம் கொண்ட உள்ளம் இழந்துவிட்ட அன்பை தேடி அலைகிறது .. என்றோ ஒரு நான் நீ வருவாயென ..
கவிதை , பாடல் ரொம்ப அழகா இருக்கிறது சத்தியா …
சத்தியா சொன்னது,
ஜனவரி 18, 2012 இல் 10:44 பிற்பகல்
ம்ம்… நன்றி அஹ்ஸன்.