எந்த ஜென்மத் தேடலாய்
நீ எனக்குக் கிடைத்த
வரமோ தெரியவில்லை…!
இரு விழியால்
எனைக் கொய்து
இதயத்தை இம்சை செய்து…
சின்ன இடியாய்
செல்ல மழையாய்
சிறுகச் சிறுக என்னை
நீ சித்திரவதை செய்யும் போது…
உனக்குள் தொலைவதிலும்
உனக்காய் என் விழிகள் அழுவதிலும்
நிலவை முட்டும் சந்தோசம் எனக்குள்…!
நிசப்தம் – சத்தியா
படம் – 7 ஆம் அறிவு .
பாடல் – முன் அந்தி சாரல் நீ …
*** இவள் – சத்தியா ***

அஹ்ஸன் சொன்னது,
ஜனவரி 19, 2012 இல் 6:16 மு.பகல்
அழகான கவிதை சத்தியா … இந்த பாடலில் இருக்கும் பாடல் வரிகளும் சூப்பர் ..
“உனக்குள் தொலைவதிலும்
உனக்காய் என் விழிகள் அழுவதிலும்
நிலவை முட்டும் சந்தோசம் எனக்குள்…!”
காதலும் , கண்ணீரும் இரட்டை குழந்தைகள் போல .. காதல் தோன்றும் போதும் கண்ணீர் வரும்; பிரியும் போதும் கண்ணீர் வரும், ஆனால் அதில் இரண்டிலுமே சொல்ல முடியாத ஒரு சுகம் இருக்கும் ..
சத்தியா சொன்னது,
ஜனவரி 19, 2012 இல் 5:37 பிற்பகல்
ம்ம்… நன்றி அஹ்ஸன்.