நரகம் பிடித்த நாளாய்
நகரும் பகலிலும்
கிரகணம் பிடித்த நிலவாய்
நீளும் இரவிலும்
என் பொழுதுகள் கழிய…
எதிலும் நாட்டமின்றி
ஏதோ கட்டாயத்துக்காய்
உடல் மட்டுமே
இங்கு இயங்குவது
போன்றதொரு உணர்வு…!
என் உலகமே
நீ என்றிருந்தேன்
நீயும் உதறி விட்டால்…
அன்பு காட்ட
யாருமற்றுப் போன
இந்த வாழ்வில்
நீயும் திரும்பிக் கொண்டால்…
இன்னும்
எதை வேண்டிக் கிடக்கிறதோ
இந்த உடலும், உயிரும்….?
நிசப்தம் – சத்தியா
படம் – உன்னுடன்.
பாடல் – கோபமா என் மேல் கோபமா …
*** இவள் – சத்தியா ***

pathu... சொன்னது,
ஜனவரி 13, 2012 இல் 5:30 மு.பகல்
அடடா….. ஏம்பா தம்பி ஏன்பா இப்படியெல்லாம் சத்தியவை புலம்ப வைக்கிற..? சத்தியா ம்… சொல்லுங்க அவனைத் தூக்கிறலாம்.
சத்தியா சொன்னது,
ஜனவரி 13, 2012 இல் 5:49 பிற்பகல்
ம்ம்… சொல்லிட்டன் பத்து.