உறக்கமற்ற இரவினில்
இமைகளை வருடும் தென்றலே…!
எதிர்பாராத தருணங்களில்
என் தேகம் நனைக்கும் சாரலே…!
விழித்தபடியே இரவைக் கழித்து
முழித்துக் கிடந்து உன்னழகை ரசித்து
அழகிய பார்வையின் வெம்மைக்குள்
என்னை முழுமையாக உட்படுத்தி…
மௌனமாய் நீ உதிர்க்கும்
சின்னச் சின்னப் புன்னகையில்
என்னையே நான் தொலைத்திருக்க…
நிசப்தங்கள் சத்தங்களாகி
முடிச்சவிழும் நேரத்திலும்
உன் அன்புப் பிடிக்குள்
நான் அகப்பட்டுக் கிடக்க…
சலனங்கள் எதுவுமின்றி
சட்டெனப் பிறக்கிறது
புத்தம் புதிய காலை…!
நிசப்தம் – சத்தியா
படம் – Pachaikili Muthucharam.
பாடல் – உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில் …
*** இவள் – சத்தியா ***

pathu... சொன்னது,
ஜனவரி 9, 2012 இல் 12:48 பிற்பகல்
அடடா என்ன அருமையான வரிகள். ம்… அப்போ ஆனந்தமான இரவுதான். இப்படியே தொடர வாழ்த்துக்கள்.
pathu... சொன்னது,
ஜனவரி 9, 2012 இல் 12:52 பிற்பகல்
பாப்பா… இதை நான் காப்பி பண்ணப்போறேன். எவேவனோ காப்பி பண்றான். நான் மட்டும் எதுக்கு விடனும்…? அதான் பண்ணிட்டேன்.
சத்தியா சொன்னது,
ஜனவரி 10, 2012 இல் 6:48 பிற்பகல்
ம்ம்… ஓகே ஓகே.
மழை சொன்னது,
ஜனவரி 12, 2012 இல் 10:00 மு.பகல்
நிசப்தங்கள் சத்தங்களாகி
முடிச்சவிழும் நேரத்திலும்
உன் அன்புப் பிடிக்குள்
நான் அகப்பட்டுக் கிடக்க…
சலனங்கள் எதுவுமின்றி
சட்டெனப் பிறக்கிறது
புத்தம் புதிய காலை…!///
சூப்பரு:)
சத்தியா சொன்னது,
ஜனவரி 12, 2012 இல் 6:39 பிற்பகல்
ம்ம்… நன்றி கண்ணன். அதுசரி இது என்ன பருவகால மழையோ…?