என் இதயப் பூங்காவில்
நீ கால் வைத்து
கடந்து சென்ற போது…
கண்களைத் திருடிவிட்டு
என்னைக் குருடாக்கி
உன் சுவடுகளை
என்னுள் விட்டுச் சென்றாய்!
உன் மௌனவிழிகள் பாடிய
காதல் தாலாட்டில்
கிறுக்குப் பிடித்து
தடுக்கி விழுவதும்
விழித்தெழுவதுமாய்..
சிறகடித்துச் சிறகடித்து
உனக்குள்ளேயே
அடைபடத் தவிக்கிறது மனசு!
ஏய்! … ஏய்!
ஏன் இந்த மயக்கம்?
ஏன் இந்தத் தவிப்பு?
உனக்கேதும் புரிகிறதா…???
படம் – நான் அவனில்லை.
பாடல் – ஏன் எனக்கு மயக்கம்…
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11213&pid=150344&st=20&#entry150344
*** இவள் – சத்தியா ***

