251 – ஒ நெஞ்சே நெஞ்சே…

உன் வாழ்க்கைப் பாதையில்
நிமிடமுட்கள் நகர்ந்து தந்தது
காயங்களோடு தோல்விகளுமாய்
காலத்தின் கட்டளையாக!

ஓ…!
சூட்சும உலகினில்
சூழ்நிலைக் கைதியாக
உனை அடைத்து வைத்தது
எந்த விதி என்று
எனக்கும் தெரியவில்லை!

கலங்காதே உயிரே…!

காயப்படும் மூங்கில்தான்
கானம் பாடுகிறது!
காயப்படும் ஓலைதான்
சுவடியாகிறது!
காயப்படும் கற்கள்தான்
சிற்பமாகிறது!

என் அன்பே…!
எம் இமைகளுக்குள் வழிவது
உண்மையான நேசம்
ஆதரவாய் உனை அணைக்க
ஆருயிராய் நான்!

வா வா நீயும்
அணைத்துக் கொண்டே எழுவோம்!

 


படம் – முகவரி .
பாடல் – ஒ நெஞ்சே நெஞ்சே…

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11213&st=20#entry150030

*** இவள் – சத்தியா ***

1 மறுமொழி

  1. kalai சொன்னது,

    நவம்பர் 11, 2009 இல் 2:49 பிற்பகல்

    Hai sathya,

    i am kalai, unga kavithai soooopppppeeeerrrr!


மறுமொழியொன்றை வழங்குக