250 – வசீகரா என் நெஞ்சினிக்க…

உன் அழகு நிறைந்த
இதய மயிலின்
அழகான தோகை விரிப்புகளால்
சிலிர்த்தெழுந்த உணர்வுகளோடு…

மழையில் நனைந்து நனைந்து
உன் அன்புப் பிடியில்
கரைந்து தொலைந்து
என் ஆசைத் துடுப்புகளோடு
உன் இதயம் கண்டு பிடித்து…

உயிர் உறிஞ்சி
உறக்கம் தொலைத்து
காதலில் கனிந்து…

இதயப் புனிதங்களால்
இதயத்தைக் கரைத்தெடுத்த
அந்த நிமிட நினைவுகள்
சொட்டுச் சொட்டாய்க்
கொட்டக் கொட்ட…

எப்போதும்
என்னருகில் நீ வேண்டுமென்று
ஏங்கித் தவிக்கிறது இந்த மனசு!


படம் – மின்னலே.
பாடல் – வசீகரா என் நெஞ்சினிக்க…

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11213&pid=149606&st=20&#entry149606

*** இவள் – சத்தியா ***


மறுமொழியொன்றை வழங்குக