நீ என்னிடம் தந்த
உன் புகைப்படத்தின் பிம்பம்
எப்போதும்
என் விழியின் ஓரத்தில்
உரசிச் செல்ல…
தூங்கும் போது மட்டுமல்ல
தும்மும் போதும் கூட
உன்னைத் தானே
என் மனம் நினைத்துக் கொள்கிறது!
ம்ம்…
மரங்கொத்திப் பறவையாய் – நீ
மனம் கொத்திப் போனதிலிருந்து…
உன்னை விட்டு
விலகவும் இயலாமல்
விடுபடவும் இயலாமல்…
ஒரு எண்ணக் கோட்டுக்குள்
அந்த எல்லைக் கோட்டுக்குள் வீழ்ந்து
உன்னைத்தானே நான்
உலகமாய் சுற்றிச் சுற்றி வருகிறேன்!
படம் – கஜனி.
பாடல் – சுற்றும் விழிச் சுடரே…
பாடல் – சுற்றும் விழிச் சுடரே…
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11213&pid=149510&st=20&#entry149510
*** இவள் – சத்தியா ***
