247 – உன்பேரைச் சொன்னாலே…

 

உள்ளத்து உணர்வுகள்
உன் உணர்வால்
எனை மெல்ல அணைத்துக் கொள்ள…

நீ வரும் வழி பார்த்து
என் விழிகள்
வழியில் தவம் கிடக்கின்றன!

அமைதியாய் நானிருந்து
அன்போடு உனை நினைத்து
உருகும்
ஒவ்வொரு துளிக் கண்ணீரிலும்
நீயாக நிறைய…

ஒவ்வொரு பொழுதுகளிலும்
என்னருகில் நீ வேண்டும்போல்
என் மனம்
வாஞ்சைப்பட்டுக் கொள்கிறது!

ம்!
என் மன வானில்
எப்போது
நீ பெளர்ணமியாவாய்…?


படம்:-  டும் டும் டும்.
பாடல்:-  உன்பேரைச் சொன்னாலே…

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11213&pid=149244&st=0&#entry149244

*** இவள் – சத்தியா ***


 

மறுமொழியொன்றை வழங்குக