246 – நிலா நீ வானம் காற்று…

 

அதோ…
மேகத்தின் மேனியில்
மெல்ல மறைந்தபடி
ஓர் அழகிய மஞ்சள் நிலா!

அது என் தேகமெங்கும்
வழிந்தோட வைக்கிறது
நின் ஞாபகங்களை!

இதோ…
துளித் துளியாய் வந்து
விழுகிறது மழைத் துளி!
அது உன் அருகாமையை
என்னருகில் அழைத்து வந்தது!

இப்படியே
மலர்கிற … மறைகிற
ஒவ்வொரு நொடியிலும்
எனை நீ இம்சை செய்ய…

மதம் மறந்து…
மனம் தொலைத்து…
தீராத காதலில் மூழ்கி…
தினம்தோறும் தேய்கிறேன் நான்!

படம் : பொக்கிஷம்.
பாடல் : நிலா நீ வானம் காற்று…

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11213&st=0#entry148765

*** இவள் – சத்தியா ***


மறுமொழியொன்றை வழங்குக