245 – கண்ணீரே! கண்ணீரே!

என் மனசெல்லாம்
உடைந்த கண்ணாடியாய்
சிதறிக் கிடக்கிறது
உன் நினைவுகள்!

நீ என்னை மறந்தாயோ
அல்லது
என் கண்ணில் படாமல்
மறைந்தாயோ தெரியவில்லை!

என் விழி திறந்து
தாய் மொழி மறந்து
மனதில் ஏக்கங்கள் சுமந்தபடி
உன் பெயரை உச்சரித்து…

கனவாய் கலைந்த உன்னை
கண்ணீரோடு தேடுகின்றேன்!

உன் மௌனப் பூட்டுடைத்து
எப்போது என் மனதை
குளிர வைக்கப் போகின்றாய்…?

படம் : உயிரே!
பாடல் : கண்ணீரே! கண்ணீரே! …

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11213&st=0#entry149102

*** இவள் – சத்தியா ***

மறுமொழியொன்றை வழங்குக