238 – ”நான் இருக்கிறேன்”



”நான் இருக்கிறேன்”

கடந்து சென்ற காலங்களின்
அனுபவப் பயணங்கள் யாவும்
வெறும் காயங்களாகி
உள்ளே அணைந்து அணைந்து
எரியும் ஞாபகங்களாய்…

பணம் பூத்துக் குலுங்கும்
மரமாய் பூத்துக் குலுங்கி
கல்லெறி பட்டுப் பட்டு
காயங்கள் மட்டும் மிஞ்ச…

முகம் தொலைத்த
மனித முகங்களோடு
தினம் புண்ணாகித் தவித்து
மனசு இறுகி
உதடுகளில் ஓசை தொலைத்து
ஏதோ ஓர் வலித்த புள்ளியில்
திசை தெரியாமல் நின்றபோது…

அன்பாய், பாசமாய்
நட்பாய், காதலாய்
இவை எல்லாம் கலந்து…

உள்ளம் திறந்து
உள்ளன்போடு நீ உதிர்த்த
”கலங்காதே நான் இருக்கிறேன்”
என்ற அந்த ஒற்றை வார்த்தை
மரணித்துப் போன
என் உணர்வுகளுக்கெல்லாம் ஒத்தடமானது!

கடலில் வழிதேடிச்
செல்லும் கப்பலுக்கு
ஒளி உமிந்து
வழி காட்டும்
கலங்கரை விளக்கம் போல்…

வாழ்க்கைப் பாதையில்
வழி தேடிக் காய்ந்த மனதிற்கு
வழிகாட்டி ஆனாய் நீ!

ம்…!
உறவுகள் இழந்து
உணர்வுகள் இழந்து
வலியில் இடறி விழும் மனம்
நீண்ட பெருமூச்செறிந்து
உடைந்து விழும் போதெல்லாம்
என்னைத் தூக்கி நிறுத்துவது…

நீயும்
நீ அன்பின் இறுக்கத்தில்
சொல்லும் அந்த…
”நான் இருக்கிறேன்”
என்ற வார்த்தையும்தான்!


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11065

*** இவள் – சத்தியா ***

2 மறுமொழிகள்

  1. அடலேறு சொன்னது,

    அக்டோபர் 15, 2009 இல் 11:08 மு.பகல்

    ரசனை கவிதை.

  2. vani சொன்னது,

    அக்டோபர் 20, 2009 இல் 4:59 பிற்பகல்

    vanakam sathiya.
    nalama? NAANIRUKIRAIN ENRA IRU SOLUKAL ENTHANAI KODI KODUTHALUM PAIRAMUDIYATHA VARTHAIKAL .VALTHUKKAL


மறுமொழியொன்றை வழங்குக