
இன்னும் ஒரு நாளென…
பாதி வாழ்க்கை தனிமையிலும்
மீதி வாழ்க்கை விரக்தியிலும்
நரம்புகள் அறுந்துபோய்
முகாரி பாடும் வீணையில்
விழுந்த கீதங்களாய்…
மீதி வாழ்க்கை விரக்தியிலும்
நரம்புகள் அறுந்துபோய்
முகாரி பாடும் வீணையில்
விழுந்த கீதங்களாய்…
இன்னும் இன்றும்
என் விரைத்த விரல்களிலிருந்து
விழும் வார்த்தைகளில்…
ஒழுகும் நினைவுகளில்…
ஒய்யாரமாய் உட்காந்திருக்கிறது
ஓராயிரம் தழும்புகள்!
ஓ…!
என் நெஞ்சப் பெட்டகத்தின்
நினைவுகளின் அடியில்
இன்னும் ஈரம் காயாமல்
உள் விளிம்புவரை
துருப்பிடித்துக் கிடப்பதெல்லாம்
ஆறாத பல ரணங்கள் தானே!
ம்…!
நான் காலம் காலமாய்
தேடிச் சுவாசித்து நேசித்த
அன்பெனும் ஸ்ருதி மட்டும்
சேரவேயில்லை இறுதிவரை!
ஆனால்
காலம் மட்டும்
ஓடும் மேகங்களாய்
சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கிறது
இன்னும் ஒரு நாளென…!
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10835
*** இவள் – சத்தியா ***
