234 – நீ விடை தருவாயா…?


நீ விடை தருவாயா…?

இந்த வேளை
நீ எங்கே இருப்பாய்…
என்ன செய்து கொண்டிருப்பாய்…
எதை நினைத்து தனியாய் தவித்துப் போயிருப்பாய்…

இப்படியே
இன்றைய பொழுது முழுவதுமாய்
உன்னைப் பற்றிய நினைவில் மூழ்கிமூழ்கி
சுற்றிச் சுழன்றடித்துச் சுக்குநூறாகி
துவண்டு போகிறது இந்த மனசு!

ஓ…!
நீ நினைப்பது…
நீ சொல்வது…
நீ சொல்ல நினைப்பது…
இப்படி எல்லாமே நடக்கிறது
அப்படியே நடந்தும் இருக்கிறது!

ஆனால்
இது மட்டும் ஏன் முடியாது போகிறது…?

ம்…
மறுமுறை
உனைக் காணும் போது…

என் இரு கரம் கொண்டு
உன் முக மலர் ஏந்தி
உன் இரு விழி பார்த்து…

இதே கேள்வி கேட்பேன்
நீ விடை தருவாயா…?

*** இவள் – சத்தியா ***


மறுமொழியொன்றை வழங்குக