233 – நீ !

அதிராத சிரிப்பு
உன் அனிச்சப் பேச்சு
உதிரும் வார்த்தையில்
உண்மையும் நேர்மையும்
என் உயிரோடு உறைய…

மயிலிறகாய் மனசு வருடி
உயிர் வரை ஊடுருவும்
உன் வார்த்தைகளால்
என் நாட்கள் நகர…

ஒருமுறை கண்டு
மறவாது துடித்து
மறுமுறை கண்டு
முக்குளித்து எழுந்து…

உள்நெஞ்சில் அப்பிப்போய்
உறைந்து கிடந்த
படிமங்களை எல்லாம்
உரித்தெறிந்து…

உன் பாதியில்
நான் நிறைந்து
என் பாதியில்
நீ நிறைந்து…

மழை நனைந்த பூவாய்
திகழும் என் மனசில்
நிறைந்த அழகாய்
கொஞ்சம் ஈரமாய்…

உயிரிலே நினைவுகள் தழும்ப
துயில்கொள்ளா இரு விழியும்
ரகசியமாய் எரிய…

அறுகம் புல்லில்
உறங்கும் பனித் துளியாய்
உயிரோடு உயிராகி – என்னுள்
உறைந்து கிடக்கிறாய் நீ!

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10649

*** இவள் – சத்தியா ***

மறுமொழியொன்றை வழங்குக