231 – வருவாயா…?



வருவாயா…?

அடிக்கடி
உன் நினைவுகள்
எனை நெருங்கி
ஓங்கி எரியவைக்க…

அன்பாய் அணைத்து
பாசம் தரும் தாகம்
என் நெஞ்சினுள் நிறைந்திருக்க…

ஒரு முறை கண்டு களித்து
விலகிய கண்களிரண்டும்
மறுமுறை உனை காணத்துடிக்க…

அம்மாவின் சேலை நுனி பற்றி
அலையத் துடிக்கும் குழந்தையாய்
உன் பின்னால்
அலைந்து திரிகிறது என் நேசம்!

ம்…
உன்மேல் உண்டான அன்பு
வேசமும் மறைப்புமில்லாமல்
நடிப்பும் பாசாங்குமில்லாமல்
சுயநலம் எதுவுமில்லாமல்
ஆழ்மனதின் அன்பின் ஊற்றாய்…

ஒரு புல்லாங்குழல்
ராகத்தைத் தேடுவது போலே…

உனை
தேடிக் கொண்டிருக்கிறேன் நான்!

எங்கே…
நீயும் ஒரு முறை வந்து
அடை மழை பொழிவதாக
உன் அன்பை
பொழிந்துவிட்டுச் செல்லேன்!

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10325

*** இவள் – சத்தியா ***

மறுமொழியொன்றை வழங்குக