230 – நினைவுகள் கூட சுகமே!


நினைவுகள் கூட சுகமே!


நான்
ஆசை ஆசையாய் வளர்க்கும்
அந்தப் பூஞ்சோலையின் நடுவே…

வாழ்க்கை வரம்பில்
கடந்து வந்த பாதைகளில்
தடம் பதிந்த நினைவுகளை
பக்கம் பக்கமாய்
மெல்லப் புரட்டிப் புரட்டி
பக்குவமாய் பல கதைகள்
கூறிக் கொண்டிருப்பாய் நீ!

கதை சொல்லியாய் நீயும்
‘ம்’ கொட்டி … ‘ம்’ கொட்டி
கதை கேட்பவளாய் நானும்…

கவலைகள் மறந்து
தனிமைகள் தொலைத்து
வெறுமைகள் கலைந்து
நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தேன்.

ஓ…!
அது ஒரு நிலாக் காலம்!

இப்போது கதை சொல்ல
நீயும் இல்லை
இனிமேல் கதை சொல்ல
நீ வரப்போவதும் இல்லை.

ம்…
நினைத்துப் பார்க்கிறேன்…

நேற்றைய காலம் என்பது
மரித்துப் போன காலமாய்…

நாளைய காலம் என்பது
நிச்சயமற்ற காலமாய்…

இந்த நிமிடம்
மட்டுமே நிரந்தரமாய்…

ஓ…
இன்று மீண்டும்
அதே தனிமை
அதே வெறுமையோடு நான்!

இனி என்ன
எஞ்சிக் கிடக்கும்
கொஞ்சக் காலம் வரை
மிஞ்சிக் கிடக்கப் போவது
நீ விட்டுச் சென்ற
அந்த நினைவுகள் மட்டுமே!

ம்ம்…
நினைவுகள் கூட சுகமே !!!


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10217

*** இவள் – சத்தியா ***


2 மறுமொழிகள்

  1. vani சொன்னது,

    மார்ச் 19, 2009 இல் 10:43 மு.பகல்

    vanakam sathiya
    nalama? ninaivukal sukamanathu vasikum poothukuda sukamanathakavai irunthathu.

    with love
    vani

  2. sharmila சொன்னது,

    மார்ச் 30, 2009 இல் 9:27 மு.பகல்

    supper Akka……..


மறுமொழியொன்றை வழங்குக