229 – உன்னதக் காதல்!

உன்னதக் காதல்!

பருவங்கள் பாராது
உருவங்கள் காணாது
உண்மையாய் மலர்ந்தது
உன்னதக் காதல்!

நம் மனப்பாறை இடுக்குகளில்
தேன் கூடு கட்டி
மௌனமாய்ப் பிறந்தது
உனக்கும் எனக்குமான
உயிர்ப்புள்ள காதல்!

காற்றின் இடுக்கில்
கசிந்து வழிந்து
குழைந்து குழைந்து
பிறந்த குழந்தை
இந்தக் காதல்!

நம் நான்கு விழிகள் சேர்ந்து
அன்று எழுதிய முதல் கவிதை
காதல்!

ம்…
நான் மெய் மறந்து
பொய் சொல்லவில்லை
இன்றும் உன்னை நேசிப்பதாய்!

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10113&st=0#entry141459

*** இவள் – சத்தியா ***

மறுமொழியொன்றை வழங்குக