உன் நினைவுகளும் நானும்…
வருடக்கணக்காய்
வாடிய விழிகளுடன்
உனைத் தேடிய
நீண்ட கொடிய பயணத்தில்…
கனவுகள் அறுத்து
நிஜத்தோடு போராடி
ஓடி ஓடி
ஒரு எல்லைக் கோட்டில் வீழ்ந்து…
வெள்ளி முழைத்த
ஒரு காலைப் பொழுதில்
துள்ளிக் குதித்து
நிமிர்ந்து பார்த்த போது…
என் விழிகளுக்குள்
நீ முதன் முதலாய்
விழுந்த அந்த வீதி…
கவிழ்ந்த தலையும்
ஊமைப் பேச்சுமாய்
மனம் பதைபதைக்க
சிலமணி நேரம் தரித்து நின்ற
விழுது பரப்பிய
அந்த உயர்ந்த மரம்…
உயிர்த் தீயில் உருகி
உன்னுள்ளே உறைந்து
நீண்ட பெருமூச்செறிந்து
உனைப் பிரிய மனமின்றி
விட்டுப் பிரிந்து சென்ற
அந்த முச்சந்தி…
ஓ…
மீண்டும்
நடந்த பாதைகளில்
பதிந்த சுவடுகளில்
நான் நடந்து வரும் போதெல்லாம்…
ஆழப் புதைந்த
நினைவுகள் எல்லாம்
உயிர் கொண்டெழுந்து
ஒவ்வொரு முறையும்
எனை உரசி விட்டுப் போக…
கடந்து போன பாதைகளில்
தடம் பதிந்த உன் நினைவுகள்
மூட்டிய தீயில்…
ஓவென்று
உள்ளிருந்து ஒப்பாரி வைத்து
என் இதயம்
கதறிய வார்த்தைகளையும்…
கழன்று விழும்
கண்ணீர் முத்துக்களையும்
நான் சிதறியே செல்கின்றேன்.
ஆண்டுகள் பல கடந்தாலும்
மீண்டும் அந்த வீதியோரம்
என்றாவது
நீ பயணம் செய்தால்…
அங்கே விழுந்து கிடக்கும்
அந்தத் துளிகள்
சொல்லும் கதைகளை
ஓர் தடவை
உன் காதுகளைக் கூர்மைப்படுத்தி
கேட்டுத்தான் பாரேன்.

யாழ்_அகத்தியன் சொன்னது,
செப்டம்பர் 5, 2008 இல் 11:31 மு.பகல்
மீண்டும்
நடந்த பாதைகளில்
பதிந்த சுவடுகளில்
நான் நடந்து வரும் போதெல்லாம்…
உங்கள் மன வேதனை கவிதையில் தெரிகிறது
kaargi சொன்னது,
செப்டம்பர் 16, 2008 இல் 5:19 மு.பகல்
நீங்கள் பதிவிட்டிருக்கும் கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் பழைய நினைவுகளைக் குத்திக் கிழிக்கிறது. காலத்தால் பின்னே போய் விட மாட்டோமா என்றிருக்கிறது…
சிலவற்றை மட்டுமே வாசிக்க முடிந்தது… அவையும் மற்றெல்லாவற்றையும் வாசிக்கத் தூண்டும் விதமாய் உள்ளது..
//உயிர்த் தீயில் உருகி
உன்னுள்ளே உறைந்து
நீண்ட பெருமூச்செறிந்து
உனைப் பிரிய மனமின்றி
விட்டுப் பிரிந்து சென்ற
அந்த முச்சந்தி…//
மற்றெல்லா துன்பங்களினும் பிரிவின் துன்பம் கொடுமையானது.. மெல்லக் கொல்லும் விஷம் போல் வாழும் நாட்கள் தோரும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்..
Hookah Starbuzz Tobacco சொன்னது,
ஆகஸ்ட் 4, 2009 இல் 7:07 மு.பகல்
Hookah offers hookahs of all shapes, sizes, and prices
Hookah Charcoal Hookah charcoal, Instant Light Charcoal Rolland
Buy StarBuzz Premium Hookah Tobacco Blueberry Apple X on the beach Fuzzy naval
Flavored Al-Fakher Tobacco Apple Caffe Latte Berry Apricot Licorice Chocolate Cherry