222 – எப்போது பெளர்ணமியாவாய்…?



எப்போது பெளர்ணமியாவாய்…?

உள்ளத்தின் உணர்வுகள்
உன் உணர்வால்
எனை மெல்ல
அணைத்துக் கொள்ள…

நீ வரும் வழி பார்த்து
என் விழிகள்
வழியில் தவம் கிடக்கின்றன!

அமைதியாய் நானிருந்து
அன்போடு உனை நினைத்து
உருகும்
ஒவ்வொரு துளிக் கண்ணீரிலும்
எப்போதும்
நீயேதான் நிறைகின்றாய் !

ஓ…!
ஒவ்வொரு பொழுதுகளிலும் – நீ
என்னருகில் வேண்டும் போல்
என் மனம்
வாஞ்சைப்பட்டுக் கொள்கிறது!

ம்…!
நீயே சொல்!
என் மன வானில்
எப்போது நீ
பெளர்ணமியாவாய்…?

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=9361

*** இவள் – சத்தியா ***

2 மறுமொழிகள்

  1. புனிதா சொன்னது,

    ஆகஸ்ட் 26, 2008 இல் 6:49 மு.பகல்

    அழகான கவிதை நீண்ட நாட்களுக்குப் பிறகு…வாழ்த்துகள்!

  2. kuppusami சொன்னது,

    நவம்பர் 10, 2008 இல் 2:00 மு.பகல்

    good


மறுமொழியொன்றை வழங்குக