220 – எதுவரை தொடருமோ…?

எதுவரை தொடருமோ…?

தூறலில் நனைந்து
குளிர்ச்சி பெற்று
மகிழ்ச்சியோடு சிரித்திருக்கும்
துளிர்கள், இலைகள், பூக்கள்…

மெல்லிய குளிர் கலந்து
சில்லென்று
எனை உரசிச் செல்லும்
இளம் தென்றல் காற்று…

அன்னை விரல் இறுகப் பற்றி
அடியெடுத்து வைத்து
அன்னம் போல் நடக்கும்
சின்னஞ் சிறு மழலை…

ஜோடி சேர்ந்து
பாடிப் பறக்கும் பறவைகள்…

இப்படியே
என் கண்ணில்
காண்பவைகள், உணர்பவைகள்
எல்லாவற்றிலுமே
உன் ஞாபகங்கள் சுமந்தவாறே…

இன்னும் இன்னும்
உனைத் தேடிக்
கொண்டிருக்கின்றேன் நான்!

கழிந்து போகிறது காலம்
வழிந்து போகிறது வாழ்க்கை!

ம்…
அறிவுக்கும், உணர்விற்கும்
அகப்படாத எதற்குள்ளோ வீழ்ந்து
வாழ்க்கையின் வளைவுகளில்
முட்டி மோதும் உராய்வுகளோடு…

நதியைத் தேடி
ஓடை ஒன்று
அலையாகி அலையாகி
கரை தாண்டி ஓடுவதாய்…

பெருமூச்சோடு
நீளும் வாழ்க்கையில்
இன்னும் எஞ்சிக் கிடக்கும்
ஆயுட் காலங்களில்
எதுவரை தொடருமோ
இந்தத் தேடும் படலம்…?

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=9129&st=0#entry131482

*** இவள் – சத்தியா ***

10 மறுமொழிகள்

  1. புனிதா சொன்னது,

    ஜூலை 7, 2008 இல் 2:05 மு.பகல்

    வாவ்… அற்புதமா இருக்குங்க….

  2. சத்தியா சொன்னது,

    ஜூலை 7, 2008 இல் 8:19 பிற்பகல்

    //வாவ்… அற்புதமா இருக்குங்க….//

    ம்… மிக்க நன்றிகள் புனிதா.

  3. புனிதா சொன்னது,

    ஜூலை 8, 2008 இல் 1:52 மு.பகல்

    ஏன் சத்தியா உங்க கவிதையெல்லாம் ஒரு தொகுப்பு நூலாக வெளியிட்டால் என்ன? நான் உங்க கவிதையின் காதலி :)

  4. சத்தியா சொன்னது,

    ஜூலை 8, 2008 இல் 9:21 பிற்பகல்

    //ஏன் சத்தியா உங்க கவிதையெல்லாம் ஒரு தொகுப்பு நூலாக வெளியிட்டால் என்ன? நான் உங்க கவிதையின் காதலி //

    ஓ… என் கவிதையின் காதலியே வருக… வருக!

    ம்… நீங்க சொல்லுறமாதிரி என் கவிதைகள் எல்லாவற்றையும் தொகுப்பு நூலாகக் கொண்டு வரும் அளவிற்கு, என் கவிதைகள் இன்னும் வளர்ச்சி பெறவில்லை என்றே நான் நினைக்கின்றேன்.

    என்றாலும், என் கவிதைக்கும் காதலி இருப்பதை நினைத்து
    மிகவும் சந்தோசம் அடைகின்றேன் புனிதா.

  5. புனிதா சொன்னது,

    ஜூலை 10, 2008 இல் 8:22 மு.பகல்

    //என் கவிதைகள் எல்லாவற்றையும் தொகுப்பு நூலாகக் கொண்டு வரும் அளவிற்கு, என் கவிதைகள் இன்னும் வளர்ச்சி பெறவில்லை//

    இது உங்க தன்னடக்கத்தை காட்டுது..ஆனா மறுபடியும் யோசித்துப் பாருங்க…அனைத்து கவிதைகளும் தகுதியானவைத்தான்… என்னுடைய கிறுக்கல் மாதிரி அல்லாமல் எவ்வளவு இனிமை…உங்களுக்கென்ன காதல் தோல்வியா? ஒவ்வொரு கவியிலும் ஏதொவொரு புரியாத ஏக்கம். அப்புறம் ஏன் தமிழ்மணத்தில் போட மாட்டேங்கிறீங்க… போட்டு பாருங்க அப்புறம் தெரியும் உங்கள் கவிதையின் சிறப்பு.

  6. சத்தியா சொன்னது,

    ஜூலை 10, 2008 இல் 9:43 பிற்பகல்

    ம்… நன்றிகள் புனிதா.

    நீங்கள் நினைப்பது போல்… எனக்குக் காதல் தோல்வி என்று
    ஏதும் கிடையாது புனிதா.ஆனால் நீங்கள் சொல்வது போல்…

    என் மனதுள் ஏதோ ஒரு இனம் புரியாத ஏக்கம் அமுங்கிக் கிடக்கிறது என்பது மட்டும் உண்மை. அது காதலால் வந்த
    ஏக்கம் இல்லை புனிதா.

    அடுத்து, கவிதைத் தொகுப்பு பற்றி எந்த வித யோசனையும்
    எனக்கு இப்போது இல்லை புனிதா. நீங்களும் கவிதை எழுது
    கின்றீர்களா…? அப்படியானால் அந்த லிங்கை எனக்கும் தாருங்களேன்.

  7. புனிதா சொன்னது,

    ஜூலை 10, 2008 இல் 11:44 பிற்பகல்

    //நீங்களும் கவிதை எழுது
    கின்றீர்களா…? //

    கவிதையென்று சொல்ல முடியாத அளவிற்கு சுமாராய் கிறுக்குவேன் :)

    ஈரமான நினைவுகள் : http://ninaivellam.blogspot.com/

  8. vani சொன்னது,

    ஜூலை 11, 2008 இல் 9:47 மு.பகல்

    vanakam sathiya.
    nalam? unkal kavithai en manai thodum poothu madum ennakku athatkku pathil thara vaindum enru oru unthuthal (mattak kavithaikal naraka illai enru artham ilai sathya) eathai thaidukirkal tholainthu vida oru nala nadpaya solunkal mudinthal naannum unkaludan sairnthu thaidi tharukirain.

    vani

  9. சத்தியா சொன்னது,

    ஜூலை 11, 2008 இல் 11:36 பிற்பகல்

    //கவிதையென்று சொல்ல முடியாத அளவிற்கு சுமாராய் கிறுக்குவேன்

    ஈரமான நினைவுகள் : http://ninaivellam.blogspot.com//

    ஓ… புனிதா, புனிதவம்… இந்தப் பெயரில் வந்த தடுமாற்றம்தான்.
    இப்போ இரண்டும் ஒன்றெனத் தெரிந்து கொண்டேன்.

    புனிதா… என்ன நக்கலா…? உங்க கவிதைகள் கூட
    நல்ல உணர்வான கவிதைகள் தானே…?

    சரி சரி… முற்றப்பக்கம் அடிக்கடி வாங்க. அங்க அதிகம்
    வேலை இருப்பதால் வெளியே எல்லாம் சுற்ற முடிவதில்லை.
    உங்க கவிதைகள், கதைகள் அங்கேயும் தொடரட்டும்… ஓகே புனிதா?

  10. சத்தியா சொன்னது,

    ஜூலை 11, 2008 இல் 11:38 பிற்பகல்

    //vanakam sathiya.
    nalam? unkal kavithai en manai thodum poothu madum ennakku athatkku pathil thara vaindum enru oru unthuthal (mattak kavithaikal naraka illai enru artham ilai sathya) eathai thaidukirkal tholainthu vida oru nala nadpaya solunkal mudinthal naannum unkaludan sairnthu thaidi tharukirain.

    vani//

    ஓ… அப்படியா…?

    ம்ம்… மிக்க நன்றிகள் வாணி.


மறுமொழியொன்றை வழங்குக