211 – ஏன் ஏன் ஏன்…?


ஏன் ஏன் ஏன்…?

ஓராயிரம் ஆசைகளை
உன் உள்ளத்தினுள்
புதைத்து வைத்து…

உன் மௌனத்தின் பூட்டை மட்டும்
ஏன் இன்று வரை
திறக்காமல் வைத்திருந்தாய்…?

கோடான கோடிக் கேள்விகள்
என் உள்ளத்துள்
கரைபுரண்டோடி நிற்க…

உனது கையினை
இறுகப் பற்றி
நெற்றியில் ஒருசிறு
முத்தம் இட்டு
என் நேசத்தை
உனக்குணர்த்தி விட்டு…

என் பரிசுத்தமான அன்பை
கண்ணீர்த் துளிகள் கொண்டு
உன் பாதங்களில்
காணிக்கையாக்கியவாறு…

கனக்கும் வார்த்தைகளைக் கசக்கி
கவியாய்த் தொடுத்து விட்டு
என் கண்ணீரைத்
துடைத்துக் கொள்கின்றேன்.

*** இவள் – சத்தியா ***

6 மறுமொழிகள்

  1. Anbu சொன்னது,

    ஜூலை 2, 2008 இல் 9:31 மு.பகல்

    hi i like very much your kavithai. it’s realy very nice. keep it up
    V.Anbu

  2. சிவநாதன் சொன்னது,

    ஜூலை 2, 2008 இல் 11:39 மு.பகல்

    ஆசைகளை வெளியில் சொல்லிக் கொள்ளாததால் வந்த வினை…!
    இது ஒரு பாடமாக இருந்தாலும், எனது அனுதாபங்கள்…

  3. vani சொன்னது,

    ஜூலை 2, 2008 இல் 1:41 பிற்பகல்

    vanakam sathiya
    çava? intha kavithai vasitha poothu unkal parusuthamana anbai kandain.

    valuthukal sathiya

    withlove
    vani

  4. சத்தியா சொன்னது,

    ஜூலை 2, 2008 இல் 11:05 பிற்பகல்

    //hi i like very much your kavithai. it’s realy very nice. keep it up
    V.Anbu//

    வணக்கம்… வாருங்கள் அன்பு.

    உங்கள் வாழ்த்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  5. சத்தியா சொன்னது,

    ஜூலை 2, 2008 இல் 11:06 பிற்பகல்

    //ஆசைகளை வெளியில் சொல்லிக் கொள்ளாததால் வந்த வினை…!
    இது ஒரு பாடமாக இருந்தாலும், எனது அனுதாபங்கள்…//

    ம்ம்… உங்கள் வருகைக்கும், தருகைக்கும்…

    நன்றி சிவநாதன்.

  6. சத்தியா சொன்னது,

    ஜூலை 2, 2008 இல் 11:12 பிற்பகல்

    //vanakam sathiya
    çava? intha kavithai vasitha poothu unkal parusuthamana anbai kandain.

    valuthukal sathiya

    withlove
    vani//

    ஹாய் வாணி… ça va bien … et vous…?

    ம்ம்… உங்கள் வாழ்த்துக்கும் நன்றிகள் வாணி.


மறுமொழியொன்றை வழங்குக