51 - முத்தம் !!!

user posted image

ஓ!…
முத்தம்!
முதல் முத்தம்!

உண்மையில்
இத்தனை சுகமானதும்
இனிப்பானதும் தானா…?

user posted image

என்
மேலுதடும் கீழுதடும் சேர்ந்து
உன் பெயரை உச்சரித்த போது…

இழுத்து
இச்சென்று
இதழ் பதித்தாய்
தித்திப்பாய் ஒரு முத்தம்!

ம்ம்!…
அதுதான் முதல் முத்தம்!!

user posted image

நீ முத்தமிடும்போதுதான்
நினைத்துக் கொண்டேன்!

அடடா!…
முத்தத்தில் கூட
இத்தனை தித்திப்பா…?

user posted image

செவ்விதழ்
என் இதழ் மீது உரச
இமைகள் செருக
கரங்கள் இறுக்கி
சுரங்கள் மீட்டி…

நொடிக்குள் பல யுகங்கள்
தொலைந்து
நாடி நரம்புகள் புடைக்க
நளின நெளிதலுக்குள்
இன்பத் தேன் பருகி…

ம்!…
தந்தாயே
தித்திப்பாய் ஒரு முத்தம்!

user posted image

அட…
போடா!

உன்னோடு
எத்தனை முறை
நனைந்தாலும் கூட
எனக்கு அலுப்பதே இல்லை
இந்த முத்தக் குளியல் மட்டும்!!

*** இவள் - சத்தியா ***

மறுமொழியொன்றை வழங்குக