33 - காலம் கனியுமா…?
ஏப்ரல் 27, 2008 இல் 6:07 பிற்பகல் (33 - காலம் கனியுமா...?)
Tags: 33 - காலம் கனியுமா...?

காலம் கனியுமா…?
எங்கேயோ
கூடிக் குலாவி மகிழ்ந்தாடி
கீச்சுக் கீச்செனெ குரலெழுப்பி
சிறகடித்துப் பறக்கும்
சிட்டுக் குருவிகளின்
சிறகசைப்புக்களின் சத்தம்
என் காதுக்குள்
நிஜமாய் நுழையும் போதெல்லாம்…
சத்தங்கள் எதுவுமின்றித் திறக்கும்
கதவின் இடுக்கு வழியே
அனுமதியின்றி நுழையும்
வெளிச்சம் போல்…
ஆழப் புதைந்த
உன் நினைவுகள் எல்லாம்
தொலைந்த புள்ளியில்
மீண்டும் பிறப்பெடுத்து
உயிர் கொண்டெழுந்து
உனைத் தேடுகிறது!
ம்…
அன்பெனும் விதை விதைத்து
நெஞ்சமெல்லாம் நேசம் வளர்த்து
நேசக் கரம் நீட்டி
வாவென்று அழைத்து…
இன்றும்
ஏதோ ஓர் நம்பிக்கையில்
உன் நினைவில் நானும்
அலைமோதும் எண்ணங்கள் சுமந்து…
சில்லென வீசும்
தென்றலின் சுகத்தோடு
பார்வையை அகல விரித்து
பாரெங்கும் பறந்து திரிந்து
உயிர் உரசும் நிமிடங்களில்
மனசின் பாரங்கள் இறக்கத் துடித்து…
ம்ம்…
அந்தக் காலக் கனிவுக்காய்
இன்னமும் இன்னமும்
உனைத் தேடித் தேடி
பறந்து கொண்டிருக்கிறது
என் நினைவுகளும் பொழுதுகளும்!

விக்னேஷ்வரன் அடைக்கலம் சொன்னது,
ஏப்ரல் 28, 2008 இல் 9:45 நான்
நல்ல கவிதை
vani சொன்னது,
ஏப்ரல் 28, 2008 இல் 10:27 பிற்பகல்
vanakam saththiya.
nalama? unnai thaidum en ninaivukalum pooluthukalum.ennatha kavithail ennaku piditha varikal saththiya.
சத்தியா சொன்னது,
மே 10, 2008 இல் 9:30 பிற்பகல்
// நல்ல கவிதை//
ம்… நன்றி விக்னேஷ்.
சத்தியா சொன்னது,
மே 10, 2008 இல் 9:32 பிற்பகல்
// vanakam saththiya.
nalama? unnai thaidum en ninaivukalum pooluthukalum.ennatha kavithail ennaku piditha varikal saththiya.//
ம்… நல்லது நல்லது… நன்றி வாணி.