45 - என் வானத்துத் தேவதையே!
மார்ச் 28, 2008 இல் 2:55 பிற்பகல் (45 - என் வானத்துத்...)
Tags: என் வானத்துத்...
என் வானத்துத் தேவதையே!
அடி
என் வானத்துத்
தேவதையே!
என் வானத்துத்
தேவதையே!
வந்த ஒரு நாளிலேயே
ஒரு விநாடிப் பொழுதில்
மின்னலாய் பறந்து வந்து
என் இதயத்துக்குள் புகுந்து…
இம்சை செய்த
இன்பத்துப் பட்டாம் பூச்சி
நீ தானடி!
பள்ளிப் பூங்காவில்
என் படிப்பை
அடிக்கடி குழப்பித் திரியும்
பருவத்துத் தேரும் நீ தானடி!
நான்
என்ன பாவம் செய்தேன்…?
நரகம் பிடித்த நாளாய்
நகர்ந்த பகலிலும்…
கிரகணம் பிடித்த நிலவாய்
நீளும் இரவிலும்…
உனக்காய் ஏங்குகிறேன்
உன் நினைவில் வாடுகிறேன்!
துக்கம் நெஞ்சைப் பிழிய
தூக்கம் தொலைத்துக் கிடக்கிறேன்!
விழி மூடிக் கொள்ள முடியாமல்
விழித்துக் கொண்டு…
உன்னிடம்
காதல் பிச்சை ஏந்துகிறேனே…!
ஏன் இப்படி
என்னை வஞ்சித்தாய்…?
*** இவள் - சத்தியா ***



Anbu சொன்னது,
ஜூலை 3, 2008 இல் 1:07 பிற்பகல்
Hi today i saw your kavithai.. un ennangal ennal unara mudigirathu. ennnidam pakirnthukol ….