46 - ஒரு முத்தம்!
மார்ச் 24, 2008 இல் 10:54 பிற்பகல் (46 - ஒரு முத்தம்!)
Tags: ஒரு முத்தம்!
என் இதயத்துள் புகுந்த
இனிய தேவதையே!
இனிய தேவதையே!
உனது விழி வாசல்
கற்கண்டுப் பார்வையில்
எனை இழந்தவன் நான்!
சில காலமாய்
என் இதயத்துள் நுழைந்து
என் உயிர்வரை கலந்து
ஊசலாடிய உனக்காய்…
ம்!…
ஒரு முத்தம்
ஒரே ஒரு முத்தம்!
என் இதழ் பதித்து
இன்று உனக்காய் தந்துள்ளேன்!
இதோ எடுத்துக் கொள்
இன்றோடு நான்
உன்னுடன் கலந்து விட்டேன்!
*** இவள் - சத்தியா ***


