48 - தூறலில் உன் நினைவு!

user posted image

தூறலில் உன் நினைவு!

மழை தூறத் தொடங்கும் போதே
நான் நனைய ஆரம்பித்து விடுகிறேன்
உன் நினைவுகளில்!

சிறு சிறு
தூறலாய் ஆரம்பித்து
பெரும் மழையாய் பொழிகிறது
உன் உண்மையான ஸ்நேகங்கள்!

ம்…
என் கற்பனைச் சதுக்கத்தில்
பதுக்கி வைக்கப்பட்டிருந்த
கனவுகள் எல்லாம்
அத்து மீறிப் பிரவேசம் பெற்றது
எல்லாம் உன்னைக் கண்ட பின்புதான்!

ஓ!…
என் கண்ணுக்குள்
ஒளியுமிழும்
ஒரு வண்ணப் பூச்சியாய் நீ!

என் நெஞ்சுக்குள்
இராகம் பாடும்
ஒரு சின்னப் பூங்குயிலாய் நீ!

ம்ம்…
நீயும்
உன் நினைவுகளும்
நிஜமாய் என்னுள்
நிறைந்திருக்கும்
ஆத்ம திருப்தியோடு
நம் நேசிப்புக் காலங்கள்
நித்தமும் தொடர…

பனித்துளிபோல்
பரிசுத்தமான உன் அன்பில்

இதுவரை
நனைந்த நினைவுகளோடும்…

இனி நனையப் போகும்
ஈர நினைவுகளோடும்…

நனைந்து கொண்டிருக்கிறது
இந்த மனசு!

*** இவள் - சத்தியா ***

4 மறுமொழிகள்

  1. புனிதா சொன்னது,

    மார்ச் 14, 2008 இல் 4:47 நான்

    இனிய கவிதை சத்தியா…வாழ்த்துகள்..எனக்கு மழை பிடிக்கும்… உங்கள் கவிமழையும் பிடிக்கும்….

  2. vani சொன்னது,

    மார்ச் 14, 2008 இல் 11:35 பிற்பகல்

    vanakam saththiya!

    nalama? naan nalam. Unkal naisuppukalum panithuli poonra antha parisutha mana anpum mutupulli yinri thodara en valuthukkal sathiya

  3. சத்தியா சொன்னது,

    மார்ச் 15, 2008 இல் 1:57 பிற்பகல்

    // இனிய கவிதை சத்தியா…வாழ்த்துகள்..எனக்கு மழை பிடிக்கும்… உங்கள் கவிமழையும் பிடிக்கும்….//

    மிகவும் சந்தோசம் புனிதா…
    உங்கள் வாழ்த்திற்கு என் மனமார்ந்த நன்றிகள் புனிதா.

  4. சத்தியா சொன்னது,

    மார்ச் 15, 2008 இல் 2:00 பிற்பகல்

    // vanakam saththiya!

    nalama? naan nalam. Unkal naisuppukalum panithuli poonra antha parisutha mana anpum mutupulli yinri thodara en valuthukkal sathiya//

    வணக்கம் வாணி,
    நீங்களும் நலம்தானா?

    ம்… நலம் விசாரிப்புக்கும், வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மறுமொழியொன்றை வழங்குக