
எப்படிப் பறப்பேன் சொல்…?
பறந்து வரச் சிறகிருந்தும் – நீ
பறந்து வராமல்
உன் இறக்கைகளை
ஒடுக்கி வைத்துக் கொண்டு…
என்னைப்
பற பற என்கிறாய்!
என் முறிந்த சிறகுகளோடு
நான் எப்படிப் பறப்பேன் சொல்…?
இருப்பினும்…
என்றாவது ஓர் நாள்
நானும் என் இறக்கைகளை விரித்து
உன்னிடம் பறந்து வரலாம்!
அதுவரை
உன் குரலைக் கேட்டுக் கொண்டிருக்கும்
வாய்ப்பையாவது
எனக்குத் தவறாமல் கொடு
அது போதும் எனக்கு!!
*** இவள் – சத்தியா ***


சிவா சொன்னது,
மார்ச் 4, 2008 இல் 9:01 பிற்பகல்
நல்ல கவிதை
வாழ்த்துக்கள் சத்தியா
சத்தியா சொன்னது,
மார்ச் 15, 2008 இல் 2:04 பிற்பகல்
//நல்ல கவிதை
வாழ்த்துக்கள் சத்தியா//
ம்ம்… உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி சிவா.