வரம் தா!
சலனமின்றி
நாளும் அமைதியாய்
ஓடிக்கொண்டிருந்த
வாழ்க்கை நதியில்
மனசில் கல்லெறியப்பட்டு
சட்டெனத் தடுக்கி விழ…
இதோ…
இந்தக்கணம்
இதழ் விரிக்கக் காத்திருக்கும்
இந்த ரோஜாவைப் போல…
இதோ…
இந்த நிமிடம்
இதயம் திறக்கக் காத்திருக்கும்
இந்தக் கவிதையைப் போல…
நானும்
உன் வருகைக்காய்
வரம் வேண்டிக்
காத்துக் தவம் கிடக்கின்றேன்.
ம்…
நீ வரம்தான் தரவில்லை
ஒரு முறை திரும்பிப் பார்த்து…
எப்போதாவது
நீ உதிர்க்கும்
அந்த ஒற்றைப் புன்னகையை…
நீ வினாடி நேரத்தில்
விட்டெறியும்
அந்தப் பார்வையை…
எனக்காய்
ம்… எனக்காய் மட்டும்!
மறவாமல் ஒரு முறை
வரமாய் என் மீது
வீசியெறிந்து விட்டுத்தான் போவேன்!
*** இவள் – சத்தியா ***


shibly சொன்னது,
மார்ச் 3, 2008 இல் 8:56 மு.பகல்
vaalltukal
vani சொன்னது,
மார்ச் 3, 2008 இல் 11:17 மு.பகல்
vanakkam sathiya!
nalama? intha kavithaikuriya valthukalai rooja pooukkal mooulam unkal meethu visividu selukirain
bye
சத்தியா சொன்னது,
மார்ச் 4, 2008 இல் 6:38 பிற்பகல்
//vaalltukal//
ம்ம்… உங்கள் வாழ்த்திற்கு நன்றி shibly.
சத்தியா சொன்னது,
மார்ச் 4, 2008 இல் 6:42 பிற்பகல்
//vanakkam sathiya!
nalama? intha kavithaikuriya valthukalai rooja pooukkal mooulam unkal meethu visividu selukirain
bye//
ம்ம்… நன்றி வாணி… நான் நலமே… நன்றிகள்.
நீங்களும் நலம் தானே?
அப்புறம் உங்கள் ரோஜாப்பூ வாழ்த்திற்கும் என் மனமார்ந்த
நன்றிகள் வாணி.