
சின்னக் கண்மணியே!
சின்னக் கண்மணியே
சிரித்திடும் சிறு பூவே
கன்னக் குழியினிலே
கவிதைகள் பிறக்குதடீ
அன்னம் போன்றவளே
அழகிய பொன் மானே
பின்னல் நடையினிலே
பின்னால் இழுத்தவளே
சின்னஞ் சிறியவளே
சின்னப் பெண் குயிலே
அன்பின் உறைவிடமே
அழகில் மயிலடி நீ
கன்னங் கருவிழியால்
கதைகள் சொல்வாயோ…?
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8224
*** இவள் – சத்தியா ***

