035 – என்னவனே!

 



என்னவனே!

மணிக்கணக்காய்
உன் மார்பில் சாய்ந்து…

மனம் திறந்து
எனை மறந்து
உடல் கொதித்து
உயிர் கசிந்து
பேசி மகிழ்ந்து…

நீ
கையசைத்து
விடை பெற்றுச்
சென்ற பின்னர்…

வீதி நெரிசலில்
வழி தவறிய குழந்தையாய்
விழி கலங்கி நிற்கிறேன் நான்!

http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=3&t=7696&st=0#entry112667

*** இவள் – சத்தியா ***

13 மறுமொழிகள்

  1. Nirshan சொன்னது,

    டிசம்பர் 3, 2007 இல் 10:21 மு.பகல்

    //வீதி நெரிசலில்
    வழி தவறிய குழந்தையாய்
    விழி கலங்கி நிற்கிறேன்//
    நன்றாயிருக்கிது சத்தியா. உங்களுடைய கவிதைகள் பலவற்றை இலங்கை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்..

  2. சத்தியா சொன்னது,

    டிசம்பர் 3, 2007 இல் 9:48 பிற்பகல்

    ”நன்றாயிருக்கிது சத்தியா. உங்களுடைய கவிதைகள் பலவற்றை இலங்கை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்..”

    ஓ…. வாருங்கள் Nirshan,

    உங்கள் வரவு கண்டு மிகவும் சந்தோசம்… நன்றிகளும் கூடவே.

    என்னுடைய கவிதைகள் பலவற்றை இலங்கை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கின்றீங்களா? மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஆனால் அவர்கள் என்னதான் சொல்கிறார்கள்? கொஞ்சம் எனக்கும் சொல்லுங்கோவன்… ஓகே வா?

  3. Nirshan சொன்னது,

    டிசம்பர் 4, 2007 இல் 8:50 மு.பகல்

    ஓ.. நிச்சயமாக..அஞ்சல் முகவரியைத் தாருங்கள்.

  4. சிவா சொன்னது,

    டிசம்பர் 4, 2007 இல் 10:15 பிற்பகல்

    வீதி நெரிசலில்
    வழி தவறிய குழந்தையாய்
    விழி கலங்கி நிற்கிறேன் நான்!

    வாழ்த்துக்கள் சத்தியா
    கவிதை நன்று

  5. சத்தியா சொன்னது,

    டிசம்பர் 5, 2007 இல் 10:59 மு.பகல்

    ம்ம்… உங்கள் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சிவா.

  6. இனியவள் சொன்னது,

    டிசம்பர் 5, 2007 இல் 11:42 பிற்பகல்

    வீதி நெரிசலில்
    வழி தவறிய குழந்தையாய்
    விழி கலங்கி நிற்கிறேன் நான்!

    வாழிக்காமல், வாழ்க்கையில்லை
    கவிதை அருமை சத்தியா,
    அதோடு எனது நன்றிகளும்!!

  7. சத்தியா சொன்னது,

    டிசம்பர் 6, 2007 இல் 8:18 பிற்பகல்

    ம்ம்… உங்கள் வாழ்த்திற்கும் நன்றி இனியவள்.

  8. கணேஷ் சொன்னது,

    டிசம்பர் 9, 2007 இல் 4:08 மு.பகல்

    நான் உங்கள் உங்கள் கவிதைகளை நிலாமுற்றத்தில் படித்துப் பிரமித்துப் போயிருக்கிறேன்.
    நல்ல கவிஞர் நீங்கள்…. நிறைய எழுதியிருப்பதால் என்னால் முழுதாய் படிக்கக் கூட முடிவதில்லை…. (நேரமின்மை காரணமாக) ஆனால் படிக்கவேண்டும்போல் எப்போதும் தோன்றுகிறது….

    என் வலைப்பதிவில் இணைத்துக் கொண்டுள்ளேன். பார்க்கவும்.
    என் வலைப்பதிவையும் படித்து கருத்துக் கூற உங்கள் பொன்னான நேரத்தைக் நான் கடன் கேட்கலாமா…

    பொன்னு. கணேஷ் குமார்

  9. கணேஷ் சொன்னது,

    டிசம்பர் 9, 2007 இல் 4:11 மு.பகல்

    என் வலைப்பதிவின் முகவரி: http://panithuligal.wordpress.com

  10. சக்தி சொன்னது,

    டிசம்பர் 9, 2007 இல் 3:53 பிற்பகல்

    //மணிக்கணக்காய்
    உன் மார்பில் சாய்ந்து…

    மனம் திறந்து
    எனை மறந்து//

    ம்ம்ம்ம் ரொம்ப ரொமான்டிக்கான சந்திப்புகளோ? :-) வாழ்த்துக்கள் சத்யா..

  11. சத்தியா சொன்னது,

    டிசம்பர் 9, 2007 இல் 11:10 பிற்பகல்

    ”நான் உங்கள் உங்கள் கவிதைகளை நிலாமுற்றத்தில் படித்துப் பிரமித்துப் போயிருக்கிறேன்.
    நல்ல கவிஞர் நீங்கள்…. நிறைய எழுதியிருப்பதால் என்னால் முழுதாய் படிக்கக் கூட முடிவதில்லை…. (நேரமின்மை காரணமாக) ஆனால் படிக்கவேண்டும்போல் எப்போதும் தோன்றுகிறது….”

    ஆஹா… இப்படிச் சொல்லுறீங்களே என்னால் நம்பவே முடியவில்லை.

    ம்… உங்கள் மனதையும் ஏதோ ஒரு வகையில் என் கவிதைகள் தொட்டுச் செல்வதை நினைத்து சந்தோசம் கணேஷ்.

  12. சத்தியா சொன்னது,

    டிசம்பர் 9, 2007 இல் 11:13 பிற்பகல்

    ”என் வலைப்பதிவில் இணைத்துக் கொண்டுள்ளேன். பார்க்கவும்.
    என் வலைப்பதிவையும் படித்து கருத்துக் கூற உங்கள் பொன்னான நேரத்தைக் நான் கடன் கேட்கலாமா…”

    கண்டிப்பா கேட்கலாம். நேரம் கிடைக்கும் போது நான் கட்டாயமாக
    வந்து படிக்கின்றேன்.

    நன்றிகள் கணேஷ்.

  13. சத்தியா சொன்னது,

    டிசம்பர் 9, 2007 இல் 11:17 பிற்பகல்

    ” ம்ம்ம்ம் ரொம்ப ரொமான்டிக்கான சந்திப்புகளோ? :-) வாழ்த்துக்கள் சத்யா..”

    ஆஹா… வாங்க சக்தி… கவிதையில கூட சந்தோசம் காண விட
    மாட்டீங்க போல இருக்கே?

    ம்ம்… உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சக்தி.


மறுமொழியொன்றை வழங்குக