என் நெஞ்சில் உன் நினைவு!
நள்ளிரவு வேளை
எங்கும் ஒரே நிசப்தம்!
முகில் கிழித்து
பறந்து கொண்டிருக்கிறது விமானம்!
முன்னே…
பின்னே…
அக்கம் பக்கம்…
சுற்றிச் சுழன்று
மேய்ந்து பார்க்கின்றது
என் விழிகள்!
ம்…!
எல்லோருமே
ஆழ்ந்த தூக்கத்தில்!
சற்று விழிகளைத் திருப்பி
ஜன்னலினூடாக
என் பார்வையை
வெளியே வீசுகின்றேன்!
ம்ம்…
ஆங்காங்கே
தாண்டிச் செல்லும் விமானங்கள்!
தொலைவாய்
மின்மினியாய்
மின்னிக் கொண்டிருக்கும்
மின் விளக்குகள்!
காடுகள்…
மலைகள்…
ஆறுகள்…
வீடுகள் தாண்டி
இன்னும் உயரமாய்
பறந்து கொண்டிருக்கிறது விமானம்!
ஓ…!
இவை எவற்றின் அழகையும் கூட
ரசித்துச் சுவைத்திடாது
தூக்கத்தைத் தொலைத்து விட்டு…
கண்விழி முழுதும்
உன் நினைவின் சுவடுகள்
கவிதையாய் வடிய
கழன்று விழும்
கண்ணீர் முத்துக்களோடு…
என் மனவெளி எங்கும்
உன் நினைவுகளை
காவியபடியே
ஆகாய வெளியில்
பறந்து கொண்டிருக்கின்றேன் நான்!
இத்தனைக்கும்
ஒரு தடவையாவது
உன் மனதில்
என் நினைவு வந்ததுண்டா…?
ம்…!
நீ எனக்குள் இருக்கலாம்
ஆனாலும்
உனக்குள் நான் வசிக்கும்
காலத்திற்காய்
என் மீது சவாரி செய்யும்
உன் நினைவுகளை
இன்னும் சுமந்து கொண்டு
பறந்து கொண்டிருக்கின்றேன் நான்!

Surya சொன்னது,
ஆகஸ்ட் 12, 2007 இல் 9:08 மு.பகல்
அருமை..
வாழ்த்துக்கள்.
சூர்யா
துபாய்.
butterflysurya@gmail.com
சத்தியா சொன்னது,
ஆகஸ்ட் 12, 2007 இல் 12:27 பிற்பகல்
ஓ!… நன்றி சூர்யா!
கணேஷ் சொன்னது,
நவம்பர் 18, 2007 இல் 7:49 மு.பகல்
கண்களின் இமை
காதலால் சுமை
சொல்லியவிதம் அருமை – அது
சத்யாஎன்பதால் பெருமை
வாழ்க வளர்க!
சத்தியா சொன்னது,
நவம்பர் 18, 2007 இல் 12:55 பிற்பகல்
ம்ம்… உங்கள் வாழ்த்திற்கும் நன்றி கணேஷ்.