23 – நிலாத் தூறல்!

வாங்கி வந்த வரமோ?

கையில் ஒற்றை ரோஜா
கண்களில் ஒருவித ஏக்கம்
வார்த்தைகள் ஏதும் வராது
வாயடைத்து
ஒட்டிப் போய் கிடக்கும் உதடுகள்!

ஏதேதோ சொல்ல நினைத்தும்
சொல்ல முடியாது
தவித்துப் போய் நிற்கும்
உன்னைப் போல்தான்
நானும்…

அன்று தொட்டு
இன்று வரை
ஒரு தடவை அல்ல
ஓராயிரம் தடவை
வார்த்தைகளைத் தொலைத்து விட்டு
வாயடைத்து நின்றேன்!

என் தலை தடவி
தவிப்புகள் தீர்க்க
தாய் மடி கிடைக்கவில்லை!

என் சின்ன இதயத்துக்குள்
சின்னச் சின்ன ஏக்கங்கள் யாவும்
முளை விடாமலேயே
முடங்கியே போயின!

ம்…!
இப்போதும் கூட
என் தலை சாய்க்க
ஒரு தாய் மடி தேடி
தவிக்கும் என் உள்ளம்!

ஓ…!
இது
நான் வாங்கி வந்த வரமோ…?

 

http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=3&t=3974&st=0#entry50722


உங்களோடு வலம் வரும்

*** இவள் – சத்தியா ***
user posted image

மறுமொழியொன்றை வழங்குக