
நீ போய் வா!
ஏய்…!
2005 ஆம் ஆண்டே
நீ வந்ததுதான் வந்தாய்
நீ எதைத்தான்
எமக்குப் பரிசாய்த் தந்தாய்…?
ரோஜாப் பூவின்
பட்டுப் பூவிதழ்கள்
மெல்ல மெல்ல
கொட்டுவது போல்…
பன்னிரு மாதங்களும்
பட்டு விழுந்ததினால்
முடிந்ததிங்கே ஒரு வருடம்!
தண்ணீரோடு பிறந்து
கண்ணீரைப் பரிசாய்த் தந்தாய்!
புயலும் வெள்ளமுமாய்
புண்பட வைத்து விட்டாய்!
பட்டதெல்லாம் போதும்
பட்ட துயரும் போதும்
விடை தருகிறோம்
நீ போய் வா!
ஏய்…!
2005 ஆம் ஆண்டே
நாம் விடை தருகின்றோம்
நீ போய் வா!
http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=3&t=3919&st=0#entry49253
உங்களோடு வலம் வரும்
*** இவள் – சத்தியா ***

anusya சொன்னது,
மார்ச் 30, 2008 இல் 3:25 பிற்பகல்
vungal kavithaigal yen manathai thotu vitana thangal kavithal thogupaga vanthirunthl villai kooduthu vangi kolgiren.pls snt rply. am vry eager to ur rply.pls snt ur contact addrs.by urs kavithai virumbi.anu