19 – நிலாத் தூறல்!

user posted image

அநாதை!


தேடுகிறேன்
எங்கும் தேடுகிறேன்
யாரையுமே காணவில்லை!

ஆறாத ஆசையுடன்
என்னை அணைத்தவர்கள் எங்கே…?

தீராத ஆசையுடன்
என்னை சுமந்தவர்கள் எங்கே…?

பத்து மாதம்
பக்குவமாய் சுமந்து
என்னைப் பெற்றெடுத்த
என் அன்னையைக் காணவில்லை!

இரவும் பகலும்
என்னைப் போற்றி வளர்த்த
என் தந்தையைக் காணவில்லை!

கதறி அழுதபடி
கண்ணுக்கெட்டிய தூரமெங்கும்
தேடிக் களைத்து விட்டேன்!

காணவில்லை
யாரையுமே காணவில்லை!

கால் போன தூரமெல்லாம்
கால் கடுக்க நடந்து விட்டேன்!

காணவில்லை
யாரையுமே காணவில்லை!

ஐயோ…!
என் கதறலின் ஒலி
உங்கள் காதுகளில் விழுகிறதா…?

பசிக்கிறது எனக்கு
பழைய சோறாவது தருவீர்களா…?

தாகம் எடுக்கிறது எனக்கு
தண்ணீர் கொஞ்சம் தருவீர்களா…?

உங்களைத்தான் கேட்கிறேன்
என் கதறலின் ஒலி
உங்கள் காதுகளில் விழுகிறதா…?

ஓ…!
இயற்கை அன்னை
எனக்குத் தந்த
இந்த வருடப் பட்டப் பரிசு
அநாதையா…?

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3749&st=0#entry46015

*** இவள் – சத்தியா ***

மறுமொழியொன்றை வழங்குக