12 – நிலாத் தூறல்!

என் மனத்திரையில்…!
———————————


ஓ…!
அந்த அதிகாலை வேளை
ஆலய மணியின் ஓசை!

ஐந்து மணியென
என் காதில் நிறைந்து
என்னைத் துயில் எழுப்பிய
சுப்பிரபாதம்!

மெல்லிய பனியில்
மேனி சிலிர்க்க
கண்ணைக் கசக்கிக் கொண்டே
கட்டாயத்துக்காய்
புத்தகம் விரித்த பொழுது!

ஓ…!
எல்லாமே இப்போது
என் மனத் திரையில்
நிழற்படமாய்!

*** இவள் – சத்தியா ***

மறுமொழியொன்றை வழங்குக