
வளர்பிறையாய்…
—————————-
ஒற்றைச் சூரியனாக நானும்
தூரத்து நிலவாக நீயும்
இணைய முடியாத
இமயங்களாய்
எதிர்வலம் வருகின்றோம்!
அர்த்தம் விளங்காமல்
ஆயிரமாயிரம் கனவுகள்!
நித்தமும் புரியாமல்
நீண்ட நினைவலைகள்!
அர்த்தமற்ற காத்திருப்பு
என்று தெரிந்தும்
தனிமையில்
உன் நினைவுகளைச் சுமந்து…
நிரப்பப்படாத இடைவெளியாய்
நீண்ட சிந்தனைகள்!
ம்…!
தனிமை எனக்கு
பழக்கப்பட்டதொன்றுதான்
இந்தத் தனிமையிலும்
உன் நினைவுகள்
எனக்குள் ஒரு சுகமே!
அதோ பார்!
அந்த வானத்தில்
வளர்பிறை போல்…
என் மன வானில்
உன் நினைவுகள்
என்றும் வளர்பிறைதான்!
http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=3&t=3061&st=0#entry31778
உங்களோடு வலம் வரும்
*** இவள் – சத்தியா ***
