09 – நிலாத் தூறல்!

user posted image

 சிறை!

உன் இதயத்தில்
எனை சிறை பிடித்திருக்கும்
என்னுயிரே!

மனவெளியில்
சோகம் நிரப்பி
மணி விழிகளில்
கண்ணீர்ப் பனிப் பூக்கும்
என் விரக்தி வெள்ளாமைக்கு
நீ சந்தோச நீர்பாச்சு!

பெற்ற அன்னையின் அரவணைப்பாய்
குற்றம் செய்யும் போது
தண்டிக்கும் தந்தையாய்
உற்ற நட்பாய்
என்றுமே நீ எனக்கு வேண்டும்!

இன்னொரு ஜென்மம்
எனக்கிருந்தால்
உன் மடியில்
நான் குழந்தையாக வேண்டும்!

இந்த ஜென்மத்தில்
பாசத்தின் வேர்கள்
பாறையைப் துளைப்பதாய்
வியாபித்திருக்க…

உன் சின்ன இதயத்தில்
என்றும் ஓர் குழந்தையாக
என் அந்திய காலம் வரை
நான் சிறை இருக்க இடம் கொடு!

http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=3&t=3007&st=0#entry30963


உங்களோடு வலம் வரும்

*** இவள் – சத்தியா ***
user posted image

1 மறுமொழி

  1. ஜூன் 22, 2007 இல் 1:31 மு.பகல்

    //உன் சின்ன இதயத்தில்
    என்றும் ஓர் குழந்தையாக
    என் அந்திய காலம் வரை
    நான் சிறை இருக்க இடம் கொடு!//

    மனதை கவரும் மந்திர வரிகள். மிக மிக சிறப்பு. வாழ்த்துக்கள் சகோதரி.


மறுமொழியொன்றை வழங்குக